108 அம்மன் பெயரும் தலங்களும் | Aadi 108 Amman Song with lyrics | Veeramanidasan | Vijay Musicals

5 Views
Published
Song : 108 Amman Peyargalum Thalangalum | Lyrics
Singer : Veeramanidasan
Lyrics : P Senthilkumar
Music : Sivanikash
Video : Kathiravan Krishnan
Production : Vijay Musicals
#ammansongs#veeramanidasan

பாடல் : 108 அம்மன் பெயர்களும் தலங்களும் | பாடல்வரிகள்
குரலிசை : வீரமணிதாசன்
கவியாக்கம் : P செந்தில்குமார்
இசை : சிவானிகாஷ்
காட்சிப்பதிவு : கதிரவன் கிருஷ்ணன்
தயாரிப்பு : விஜய் மியூசிக்கல்ஸ்

பாடல்வரிகள் :

அபயம் அளித்து ஆட்கொள்வாய் அபயாம்பிகையாய் மயிலாடுதுறையிலே
யோகமுத்திரை உன்கோலம் கமலாம்பிகைத் திருநாமம் திருவாரூரிலே
ரங்கநாயகியாம் ஸ்ரீரங்கத்திலே ரங்கநாதருடன் சேவை சாதிப்பவளே
ஸ்ரீ சைலம் ப்ரம்மராம்பிகையே கைதொழுதால் காரிய சித்தியே
ஏவல் பில்லி சூனியங்கள் அகல சோட்டாணிக்கரை பகவதியே
விசாலாக்ஷியும் நீயே விஸ்வநாதன் துணைகொண்டாய் காசியிலே
சந்தியா காலத்தில் சரஸ்வதியாய் மங்களாம்பிகையின் ஸ்ரீவாண்யவாசம்
கருணை தெய்வமே கற்பகமே திருமயிலையின் உன்நாமமே
துர்கா லக்ஷ்மி சரஸ்வதி வாயே வைஷ்ணவியாய் காஷ்மீரத்திலே
ஈஸ்வரி மஹேஸ்வரி நீயே சாமுண்டீஸ்வரி மைசூரிலே
அன்னபிக்ஷை அளித்திடுவாய் காசிமாநகரின் அன்னபூரணியே
வாயு வடிவான மகேஸ்வரனின் ஞானபிரசனாம்பிகை காளஹஸ்தியில்
திருபதிகை திரிபுரசுந்தரியே தீர்த்திடுவாய் வினையை சீக்கிரமே
வைதீஸ்வரனின் தையல் நாயகி உறைவாய் வைதீஸ்வரன் கோவிலிலே
திருநாரையூர் திருத்தலத்தின் மகிமையே செளந்தர்யநாயகி சரும நோயைத் தீர்ப்பவளே
பெரிய கோவிலின் பெரியநாயகி பெரியவளே தஞ்சாவூரிலே
பிரகதாம்பிகையே காமதேனு வழிபட்ட திருக்கோகர்ணம் அம்பிகையே
புன்னைநல்லூரிலே சதாசிவபிரம்மேந்திரர் போற்றிய மாரியே
ஸ்ரீராமரும் பர்வதவர்தினியாய் உன்னைக்கண்டார் ராமேஸ்வரத்திலே
தாயே திரிபுரசுந்தரி திருவான்மியூர் வளர்ஈஸ்வரி
திருவொற்றியூர் வளர்த்திருவே திருவுடையம்மையே உமையே
ராஜராஜேஸ்வரி ராணியே நங்கைநல்லூரின் நாயகியே
ஆதி சங்கரர் தொழுதிடும் காமாட்சி காமகோடி பீடமாய் காஞ்சியிலே
மண்டபம் இல்லாமல் மாட்சியும் புரிந்திடும் உறையூர் வெக்காளியே
முன்வைத்த காலின் அடிகை பட்டீஸ்வரத்து துர்க்கையிடம் கண்டோமே
கனகமழை பொழியும் விஜயவாடாவின் கனகதுர்க்கையே
கொலுசுடன் கொலுவும் கண்டேன் திருமியச்சூர் லலிதாம்பிகையிடமே
பாரெல்லாம் போற்றிடும் சக்தி மீன்குலத்து பகவதித் தாயே
திருவெண்ணெய்நல்லூரிலே வேற்கண்ணியம்மையின் மங்கலமே
ஒப்பிலா ஓர் மணியே திருவாடுதுறை ஒப்பிலா முலை அம்மையே
ராகுதேவனின் உறை திருநாகேஸ்வரத்தின் குன்றமுலை நாயகியே
அய்யாரப்பனே ஐயம் தீர்ப்பாய் தர்மசம்வர்தினியுடன் திருவையாரிலே
சிவகாமியே நடராஜனுடன் நடம்புரிவாய் சிதம்பர சிற்றம்பலத்திலே
சூடிக்கொடுத்த சுடர்கொடியே ஆண்டாள் எனும் நாமம் ஸ்ரீவில்லிபுத்தூரிலே
ஸ்ரீனிவாசனின் திருமார்பிலே அலர்மேல் மங்கை திருமலையிலே
கல்வியும் காவியமும் சிறக்க ஞானசரஸ்வதியாய் கூத்தனூரிலே
புண்டரீகவல்லியே புன்சிரிப்போடு திருஇந்தளூரிலே
கோலாப்பூரிலே கொண்டாட்டமே மஹாலக்ஷ்மியின் பார்வை வரமே
நமக்கல்லின் நாமகிரித் தாயார் நானிலம் போற்ற வைப்பவளே
பாரெல்லாம் பணிந்திடும் பராசக்தியே பண்ணாரி மாரியம்மா
பாண்டுரங்கன் நாமம் கேட்க ருக்மிணி நின்றாள் பண்டரிபுரத்திலே
குருரமணரின் தாயே அண்ணாமலையின் உண்ணாமுலையே
உப்பிலியப்பனின் கோவிலிலே ஒப்பிலா அலைமகளே மஹாலக்ஷ்மித் தாயாரே
ஊசிமுனையிலே தவம் செய்யும் உத்தமியே மாங்காடு காமாட்சியம்மா
தீமையைத் தீயாய் எரித்திடும் திருவே திருவேற்காட்டின் கருமாரியம்மா
ஸ்ரீ ராமகிருஷ்ணரும் சாரதையும் வணங்கிய தக்ஷிணேஸ்வர பவதாரிணியே
இச்சா சக்தி கிரியா சக்தி ஞான சக்தி முருகனின் வள்ளி தெய்வயானையே
திருக்கண்ணமங்கையின் தாயாரும் நீயே அபிஷேக வல்லியே
தக்ஷினதுவாரகை ராஜமன்னார்குடியில் ரமாதேவியே
லக்ஷ்மிரமா நீ உறைவாய் நாகபட்டின செளந்தர்யராஜனின் அருகினிலே
பரசுராமனின் தாயே விஜயபுரத்தில் ரேணுகா தேவியே
கோதண்டராமனின் குலவிளக்கே கோகிலமே ஜானகிதேவியே
தவறேதும் செய்தால் நிறுத்திவிடும் மாசாணியம்மனே
திருவாரூரிலே தனிக்கோவில் நீலோத்பலாம்பாவின் திருவருளே
ஜகத்தின் சாட்சியே ஆதிபராசக்தியே அல்லிக்கரணையில் உன்னாச்சியே
தாமரைக் கண்ணால் தரணியைக் காப்பாய் முண்டகக்கன்னியாய் திருமயிலையிலே
அர்தநாரீஸ்வரனின் பாதியே திருச்செங்கோட்டின் பரதேவதையே
தாயுமானாய் தாயுமானவரின் மட்டுவார்குழலி அம்மையே
செண்பகவல்லித்தாயே கோவில்பட்டியில் கோமகளே
சிறுவாச்சூரின் சீர்மிகுத் தாயே மதுரகாளியே
எதிரி பயம் என்னிடம் நெருங்குமோ ப்ரத்யங்கராணி இருக்க
சங்கீத மும்மூர்த்திகள் உபாசித்த பங்காரு காமாட்சியே
கண்போல காப்பவளே கண்மணியே கண்ணாத்தாளே
நடராசர் நலம் தேடி நாடிவரும் கொப்புடை நாயகியே
யாழைப் பழித்த மொழியாளே வேதாரண்யத்தில் வேதப்பொருளே
கருவைக் காப்பவளே கற்பகமே கர்பரக்ஷாம்பிகையே
ஆனந்தவல்லியின் அற்புத தரிசனம் திருச்செந்தூரிலே
பத்ரகாளியே முத்துமாரியே கெளமாரியே சந்தனமாரியே
மாதங்கி கமலாட்சி நீரஜாட்சி தாட்சாயணியே
சீதளாதேவியே கோகிலாம்பாளே அங்காள பரமேஸ்வரியே
கோணியம்மா தண்டுமாரியம்மா கோலவிழியம்மா வீரமாகாளியம்மா
சித்தர் பீடத்தின் சிங்காரமே மேல்மருவத்தூர் சக்தியே
காசியில் பாதியாம் அவிநாசியின் கருணாம்பிகையே
கூடுதுறையில் குடிகொண்டவளே சங்கமேஸ்வரர் உறை வேதநாயகியே
அமிர்தம் ஆனவளே அருமருந்து நாயகியாம் திருத்தேவன்குடியிலே
மஞ்சளில் நீராடும் மாரியே கருவாழக்கரை காமாட்சியே
மாத்ருபூதேஸ்வரர் மனம் மகிழ் செளந்தர்யமாக ரமணாஸ்ரமத்திலே
ஸ்கந்தனின் அன்னையே அஷ்டதசபுஜ துர்கையாய் ஸ்கந்தாஸ்ரமத்திலே
மாஹாவிஷ்ணுவின் மார்பினிலே வரலக்ஷ்மியாய் வரம் அருள்பவளே
கோரும் வரம் தரும் கோட்டைமாரியாய் மாங்கனி நகரினிலே
காலடி விழுந்தால் காத்திடுவாளே கனகவல்லி காளிகாம்பாளே
தருமமிகுச் சென்னையிலே அஷ்டலக்ஷ்மியே ஐஸ்வர்யம் தருபவளே
பொங்கி வரும் அருளே கங்கையம்மையே பகீரதன் தலமே
பாரெல்லாம் நிறைந்தவளே பரிபூரணியே நித்யகல்யாணியே
சக்தியின் வடிவங்கள் நூற்றியெட்டு காண்பவர்க்கு புண்ணியலோகமுண்டு
சிந்தையும் செயலும் ஒன்றெனக்கொண்டு அனுதினமும்
துதிப்பவர்க்கு அம்பிகையின் அருளுண்டு
ஓம் சக்தி . . . ஓம் சக்தி . . . ஓம் சக்தி ஓம்
Category
Lyrics
Commenting disabled.